மதுவினால் பல பிரச்சனைகள் ஏற்பட்டபோதும் ஏன் நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண் டே இருக்கிறார்,
மன உறுதி இல்லாதவரா? வேண்டுமென்றே செய்யக்கூடியவராத?
அல்லது சில மனைவிமார்கள் நினைப்பது போல் வெறும் திமிரா?
இதில் எதுவுமே உண்மையான காரணம் இல்லை.
கட்டுப்பாடு இல்லாமல் குடிப்பது ஒரு நோய்! குடிநோய்க்கும் சிகிச்சை உண்டு!
மதுவைப்பற்றி சில தவறான எண்ணங்கள்
1. மது வகைகளில் உடல் நலத்திற்குத் தேவையான வைட்டமின்களோ புரதசத்துக்களோ, தாது உப்புக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களோ எதுவும் கிடையாது. மது வெறும் எரி சக்தி (Empty calories) மட்டுமே.
2. பீர் குடிப்பவரும நோயாளியே. எந்த மது வகையானாலும் போதையூட்டும் ரசாயணப் பொருள் ஆல்கஹால் என்பதே. நாட்டுச் சாராயத்திலிருந்து உயர்தர மது வகையில் இருப்பது இதுவே. ஆனால் உள்ள அளவு மட்டும் மாறலாம். இதுவே சிறுமூளையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
3. மது அருந்துவதால் உடல் சூடாகிறது என்பது முதல் கிளாஸ் வரையே, மதுவின் அளவு அதிகமாக, அதிகமாக இரத்தக் குழாயை விரிவடைய செய்து குளிரைத் தாங்கும் சக்தியைக் குறைக்கிறது.
4. மது உடல் உறவு சக்தியை அதிகரிக்கிறதுப என்பது பொய்யே.இது ஆசையை யும் வெறியையும் தூண்டி செயல்திறனை இழக்கச் செய்கிறது. தொடர்ந்து குடித்துக்கொண்டிருப்பவர் ஆண்மையை இழக்கிறார்கள் இது அறிவியல் உண்மை.
குடிநோய் என்பது என்ன?
கட்டுப்படுத்த முடியாது குடிப்பது ஒரு நோய் என உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்க மருத்துவச் சங்கமும் 1956 – ம் ஆண்டு கூறின.
சாதாரணமாக மது அருந்த ஆரம்பித்த பத்து பேரில் இரண்டு பேர் மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர். இவர்களே குடி நோயாளிகள்.
குடி நோயாளியின் அறிகுறிகள்
போதை ஏற இரண்டு கிளாஸ் குடித்தவருக்கு அதே அளவு போதை ஏற 4 கிளாஸ் தேவைபடும். குடியின் அளவு அதிகரித்தல் இது அவரது உடல் உறுப்புகள் சீர்கெட்டுப்போகும்.
குடி போதையால் நேற்று செய்து, நடந்த நிகழ்ச்சிகள் பற்றி அடுத்தநாள் சொல்ல முடியாத ஞாபக மறதி (Black out) என்னும் நிலை.
எப்போது மாலை நேரம் வரும்? எப்போது வேலை முடியும்? எப்போது விடியும்? எப்போது, எங்கு குடிப்பது என குடி பற்றிய சிந்தனையிலேயே இருப்பது.
தன்னைத்தானே வெறுப்பது, மற்றவரின் மேல் குறை கூறுவது கோபப்படுவது, எரிச்சல் அடைவது குறிப்பாக மனைவி மீது சந்தேகப்படுவது
கோயிலுக்கு வேண்டிக்கொடு குடியை நிறுதவதாக சத்தியம் செய்தல், குழந்தைகளை வேண்டுதல்.
குடிப்பதற்காகக் காரணமில்லாமல் பொய் சொல்வது திருடுவது ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல். உடல் உறுப்புகள் பாதிப்பினால் கை கால்நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, பலகீனம் ஏற்புதல், (உ-ம்0 மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண், ஈரல் வீக்கம் ஏற்படுதல்,
தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள், குரல்கள் உருவங்கள் தெரிதல்.
தன் இயலாமை, அவநம்பிக்கையால்தன் மனைவியின் நடத்தையை சந்தேகித்தல், தற்கொலை முயற்சி செய்தல்.
இப்படியே குடி தொடர்ந்தால்!
உடல் நலம் கெட்ட அகால மரணத்தை தழுவுவர்.
குடும்ப உறவுகள் பாதித்து மனைவி பிரிந்து போவார். தனிமைப் படுத்தப்படுவர்.
குழந்தைகளை மன நிலை பாதிகப்பட்டு அவர்களின் படிப்பு எதிர்காலம் பாழாகும். அவர்களும் குடிக்கு அடிமையாக்க் கூடும்.
தொழிலில் ஈடுபாடு இன்மையால் நஷ்டம்.
தொடர்ந்து குடித்து மன நோயாளியாவர். தற்கொலை முயற்சி செய்வர்.
இந்நிலையில் மதுவை முழுமையாய் விட்டுத் தெளிவான புது வாழ்வைத் துவங்குதே அவர்கள் வாழ மீள ஒரே வழி. குடி பழக்கத்தை முற்றிலும் விடுவது..
மருத்துவ மனோத்த்துவ சிகிச்சை மூலம் குணம் பெறலாம்.
1. உடலில் உள்ள மதுவின் பாதிப்பை நீக்கி உடல் நலம் தரும் ம ருத்துவ சிகிச்சை தரப்படுகிறது. (Detoxification) (மருத்துவமனையில் தங்கி டாக்டர் உதவி பெறுவது முதல் அவசியத் தேவை)
2. குடி நோயாளியின் மனநிலை குடும்பம், சமூக உறவுகள் இவற்றின் பாதிப்புகளை மன இயல் ரீதியாக ஆராய்ந்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
3. மனச்சுமைகளை தடைகளை கலக்கத்தை நீக்க கலந்துரையாடல்கள் அளிக்கப்படுகிறது.
4. குழு சிகிச்சை முறை, குடும்பத்தினருக்கு ஆலோசனை (Group theraphy, family therapy) உடற்பயிற்சி, தியானம் அளிக்கப்படுகிறது.
5. ஓராண்டு கால மருத்துவ மனோதத்துவ ஆலோசனை உதவி இவற்றால் பூரண கு ணம் பெறலாம். ஒரு வருட காலம் எங்களுடன் தொடர்பு கொள்வது அவசியம்.
குடிநோய்க்கு அடிமையாகிவிட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, புனர் வாழ்வு கொடுப்பதை நோக்கமாகக்கொண்டு இலாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்,மகளிருக்கும் விரிவான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.






Well the easy answer is NO,
and that’s why most people worldwide with a severe alcohol problem
don’t even realize it. They seem to have their blinkers on and are only
interested in seeing what’s in front of them rather than stepping
outside of their own little box, and people like this hardly ever admit
that alcohol plays a part in their life.

