Friday 26 April 2013

மதுவால் ஏற்படும் இழப்பு பெரியது.-- நண்பரின் தீராச் சோகம்



இழப்பைப் பற்றி சொல்வதானால்: அவர் குடித்த குடி, இறுதியில் அவர்
“குடி”யையே கெடுத்தது.

மஞ்சள் காமாலையினால் ஏற்பட்ட லிவர் ப்ராப்ளத்தை சரி செய்ய ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கும் சில நாட்களிலேயே அவர் உட்கொண்ட ஆல்கஹால் அவரையே அழித்துவிட்டது. எதிர்பாராத திடீர் இழப்பு.

குடிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தும், எடுத்துச்சொல்லியும், அதனை அவர் ஏற்றுக்கொண்ட போதும் அவரைப் பாடாய்படுத்தியது அவருக்கு உண்டாக்கப்பட்ட குடிப்பழக்கம்.

சிப், சிப்பாக ஆரம்பித்து, பெக், பெக்காக தொடர்ந்து, பாட்டில் பாட்டிலாக விழுங்கியது, இறுதியில் அவரையே விழுங்கி விட்டது.


டி.வி.யில் மது அருந்தும் காட்சி வரும்போது, இப்போதெல்லாம் மது உடல் நலத்திற்கு கேடு என்று போடுகிறார்கள். இதைப் பார்க்கும் போது மிக இயல்பாக கடந்து விடுகிறேன். ஏன் என்றால் மதுப் புட்டியின் மீதே ”வீட்டிற்கும், நாட்டிற்கும், உடல் நலத்திற்கு கேடு” என்று அச்சடித்திருக்கும்போதே, ஆயிரம் ஆயிரம் பேர்கள் அதனை அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆயிரம் பேரில் படிக்காதவர்கள் 500 பேர் இருந்தால், படித்தவர்கள் அதற்கு சமமாய் இருப்பார்கள் அல்லவா. அவர்களைக் கூட இந்த வாசகம் பாதித்திருக்காதா.

ஒருவர் குடிப்பது அவருக்கு இன்பமாக இருக்கிறது, ஆனால் அவரின் சுற்றத்திற்கு குறிப்பாய் மனைவி, மக்களுக்கு தீராச் சோகம். இதனை அறிந்த ஆண் மக்கள் குடிப்பதுதான் வேதனை தரும் விஷயம்.

நாளை முதல் குடிக்க மாட்டேன், இது சத்தியமடி தங்கம் - இது
சத்தியமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இழப்பை எதிர்நோக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், இழந்தவர்களாய் அவர்கள் இருக்கும்போதுதான் அதனருமைத் தெரியும். உங்களிடம் குடிப்பழக்கம் இருக்குமாயின் குடிப்பதற்கு முன், உங்கள் மனைவியையோ, குழந்தையோ ஒரு தரம் கண் முன் நிறுத்துங்கள்.

 
நண்பர்களுக்காகவென்றும், சந்தோசத்தை கொண்டாடவும், கவலையை மறக்கவும், உடல் வலி மறக்க என குடிக்கத்தான் எவ்வளவு காரணங்கள் இருக்கிறது ஒருவருக்கு.
ஆனால் அதனை மறப்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும், அது நீங்கள் யாருக்காக உங்களை உற்சாகமாக வைத்திருக்கிறீர்களோ, யாருக்காக உடல்வலிக்க உழைக்கிறீர்களோ, யாருக்காக கவலைப்படுகிறீர்களோ, அவர்களை மிகச் சீக்கிரமே முற்றிலுமாக இழக்க நேரிடும் என்பதே. உங்களின் இச்செயலால் உங்கள் குடும்பத்தினர் குடிக்க நேர்ந்தால் ????????
.

இழப்பை எனக்கு முன்பே உணர்த்த நினைத்திருக்கிறார் கடவுள். கடைசியில் அது நடந்தே முடிந்துவிட்டது. அவரின் விதி முடிந்தது, ஆனால் அவரை இழந்து தவிப்போரின் கதி - ?.

நாம் மிகவும் நேசிக்கும் நமது உற்றத்தையும், சுற்றத்தையும் பாதிக்கும் “குடி”யை குடிக்கத்தான் வேண்டுமா, பொருளாதாரம் குறைந்தால் கூட குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் பொருளுக்கே ஆதாரமாக, ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவன் இழந்தால், குடும்பம் என்ற அமைப்பே குலைய நேரிடும்.
எய்ட்ஸை விடக் கொடுமையான இந்த குடிப்பழக்கத்தால் நம்மில் பலர் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பாதிக்கப்பட்டிருப்போம்.
மருத்துவத்தால் சரி செய்ய முடியா நோய்கள் வந்து இழப்பு நேர்வது ஒரு பக்கம் ஏற்படுவது ஒருபக்கம் இருந்தாலும், இறைவன் கொடுத்த இந்த உயிர் சுமக்கும் உடலை, ஏன் தீண்டா திரவத்தை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.



நன்றி: http://amirdhavarshini.blogspot.in

மதுவால் ஏற்படும் சில பாதிப்புகள்

கிளர்ச்சி நிலை (excitement) : 

முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படுவதாக உணர்கிறார்கள் .

ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது. 

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும். 

இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது

1. தசை கட்டுப்பாடு இழக்கும்.

2. தொடு உணர்வுகள் குறையும்.

3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
 
 

1. வாய் வார்த்தைகள் குளறுதல்,

2. நடையில் தள்ளாட்டம்,

3. அதிக மயக்கம்,

4. ஞாபக மறதி

5. அதிக குழப்பம்

ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.

கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது..

 

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்(AA)

குடி நோயாளிகள் வாழ்வில் புது வசந்தம் வீசுவதற்கு காரணம், "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' (AA)  இயக்கம்.


அமெரிக்காவை சேர்ந்தவர் பில். இவர், ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றியவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், பணி யில் கவனம் செலுத்த முடியவில்லை; குடும் பத்தையும் கவனிக்க முடியவில்லை. குடிப்பழக் கத்தை கைவிட பெரும் முயற்சி எடுத்தார்; முடியவில்லை. வில்லியம் சில்க் ஒர்த் என்ற மனநல மருத்துவரிடம் சென்றார். குடிப்பழக்கத்தை நிறுத்து வதற்கு உதவி கோரினார். ஆறு ஆண்டுகள் போராடி யும், குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. ஆனால், எதையும் கருதாமல் டிச., 11,1934ல் திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தினார்.

இவரைப் போலவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் டாக்டர் பாப். அறுவை சிகிச்சை நிபுணர். குடிப்பழக்கம் இருந்தாலும், மருத்துவத் தொழிலில் பெரும் கில்லாடி. குடிக்காமல், அவரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது; கைகள் நடுங்கும்.

டாக்டர் பாப்பை அறிந்த பில், அவரை சந்திக்க நேரம் கோரினார். 15 நிமிடம் நேரம் ஒதுக்கித் தந் தார் டாக்டர் பாப். இருவரும் மனம் விட்டு பேசினர். 15 நிமிடம் நேரம் ஒதுக்கிய டாக்டர் பாப், ஆறே கால் மணி நேரம், குடிப்பழக்கம், அதனால் ஏற்படும் தீமை, பழக்கத்தை கைவிடும் முயற்சிகள் குறித்து பில்லுடன் உரையாடினார். குடிப்பழக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதில் இருந்து மீண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், இறுதித் தீர்வு கிடைக்கும் என்று இருவரும் நம்பினர். இந்த சந்திப்பு நிகழ்ந்தது மே 12,1935ல்.

சில நாட்களில் டாக்டர் பாப்பும் குடிப் பழக் கத்தை நிறுத்தினார். குடிப்பழக்கம் ஒரு நோய் என்பதை டாக்டர் பாப் உணர்ந்தார். கோபம், சுயபச் சாதாபம் போன்றவையே குடிப் பழக்கத்துக்கு முக் கிய காரணங்களாக உணர்ந்தார். தன் மருத்துவமனையில் குடிநோயாளிகளுக்கு, குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காகவே தனி வார்டு துவக்கினார்; ஆனால், அதில் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.

பில் மற்றும் டாக்டர் பாப் இது குறித்து ஆலோசித்தனர். இருவரும் சேர்ந்து, ஜூன் 10,1935ல் ஒரு குழுவை ஏற்படுத்தினர். "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' என்பது அந்த குழுவின் பெயர்.



 இந்த அமைப்பை துவக்கிய போது சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினர் பாப் மற்றும் பில். அவை:

* அரசின், மது தொடர்பான கொள்கை முடிவுகளில் தொடர்பு இல்லை.

* மதம், ஜாதி, பிரிவுகள், அமைப்புகள், அரசியல் இயங்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

* கட்டாய உறுப்பினர் சேர்க்கை கிடையாது.

* உறுப்பினர்கள் மட்டுமே நன்கொடை அளிக்கலாம்.
* அதிகபட்ச நன்கொடைக்கு வரம்பு நிர்ணயம். தற்போது, அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே, அதுவும் உறுப்பினர்களிடம் மட்டுமே நன்கொடை பெற்றுக் கொள்ளப்படுகிறது.

* எதிர்காலத்தில் சச்சரவுகளை தவிர்ப்பதற்கு, இக்குழுவுக்கென சொத்துக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.



அமெரிக்காவில் துவக்கப்பட்ட இந்த, "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பு, உலகம் முழுவதும் பரவியது. 212 நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 840 குழுக்கள் உள்ளன; இவற்றில் 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தினமும், குறிப்பிட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கூட்டத்தில், மதுவால், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், அதில் இருந்து எப்படி மீண்டனர், அதற்குப் பின் ஏற்பட்ட புது வாழ்க்கையின் வசந்தம் குறித்தும், உறுப்பினர்கள் விவரிக்கின்றனர்.

பெங்களூரு மற்றும் மும்பையில், குடிப் பழக்கத்துக்கு ஆளான பெண்களை மீட்பதற்காக, பிரத்யேக கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.

"ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பில் உறுப்பினர்களாக இருப்போர், குடியின் கொடுமை குறித்து முழுமையாக அறிந்து, அதில் இருந்து மீண்டு, நல்வாழ்க்கை நடத்துவோர்கள் தான். இவர்கள், குடிப்பழக்கத்தில் இருந்து மற்றவர்களை மீட்பதை தங்களின் முக்கிய குறிக் கோளாக கொண்டுள்ளனர்.

குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு, மீண்டும் குடிக்கும் ஆவல் எழும் போது, இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அப்போது, அவர்கள் தொலைபேசியிலேயே கவுன்சிலிங் அளித்து, குடிக்கும் எண்ணத்தை மாற்றி விடுகின்றனர். தேவைப்பட்டால், வீட்டிற்கு அல்லது குடிப்பழக்கத்தை நிறுத்தியவர் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று கவுன்சலிங் அளிக்கின்றனர். இதை ஒரு சேவையாக மட்டுமின்றி, கடமையாக அவர்கள் கருதுகின்றனர்

நன்றி : http://deaddiction-ayurveda.blogspot.in

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் சுட்டிகளை சொடுக்கவும் .

AA தமிழ்நாடு