Friday 26 April 2013

மதுவால் ஏற்படும் இழப்பு பெரியது.-- நண்பரின் தீராச் சோகம்



இழப்பைப் பற்றி சொல்வதானால்: அவர் குடித்த குடி, இறுதியில் அவர்
“குடி”யையே கெடுத்தது.

மஞ்சள் காமாலையினால் ஏற்பட்ட லிவர் ப்ராப்ளத்தை சரி செய்ய ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கும் சில நாட்களிலேயே அவர் உட்கொண்ட ஆல்கஹால் அவரையே அழித்துவிட்டது. எதிர்பாராத திடீர் இழப்பு.

குடிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தும், எடுத்துச்சொல்லியும், அதனை அவர் ஏற்றுக்கொண்ட போதும் அவரைப் பாடாய்படுத்தியது அவருக்கு உண்டாக்கப்பட்ட குடிப்பழக்கம்.

சிப், சிப்பாக ஆரம்பித்து, பெக், பெக்காக தொடர்ந்து, பாட்டில் பாட்டிலாக விழுங்கியது, இறுதியில் அவரையே விழுங்கி விட்டது.


டி.வி.யில் மது அருந்தும் காட்சி வரும்போது, இப்போதெல்லாம் மது உடல் நலத்திற்கு கேடு என்று போடுகிறார்கள். இதைப் பார்க்கும் போது மிக இயல்பாக கடந்து விடுகிறேன். ஏன் என்றால் மதுப் புட்டியின் மீதே ”வீட்டிற்கும், நாட்டிற்கும், உடல் நலத்திற்கு கேடு” என்று அச்சடித்திருக்கும்போதே, ஆயிரம் ஆயிரம் பேர்கள் அதனை அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆயிரம் பேரில் படிக்காதவர்கள் 500 பேர் இருந்தால், படித்தவர்கள் அதற்கு சமமாய் இருப்பார்கள் அல்லவா. அவர்களைக் கூட இந்த வாசகம் பாதித்திருக்காதா.

ஒருவர் குடிப்பது அவருக்கு இன்பமாக இருக்கிறது, ஆனால் அவரின் சுற்றத்திற்கு குறிப்பாய் மனைவி, மக்களுக்கு தீராச் சோகம். இதனை அறிந்த ஆண் மக்கள் குடிப்பதுதான் வேதனை தரும் விஷயம்.

நாளை முதல் குடிக்க மாட்டேன், இது சத்தியமடி தங்கம் - இது
சத்தியமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இழப்பை எதிர்நோக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், இழந்தவர்களாய் அவர்கள் இருக்கும்போதுதான் அதனருமைத் தெரியும். உங்களிடம் குடிப்பழக்கம் இருக்குமாயின் குடிப்பதற்கு முன், உங்கள் மனைவியையோ, குழந்தையோ ஒரு தரம் கண் முன் நிறுத்துங்கள்.

 
நண்பர்களுக்காகவென்றும், சந்தோசத்தை கொண்டாடவும், கவலையை மறக்கவும், உடல் வலி மறக்க என குடிக்கத்தான் எவ்வளவு காரணங்கள் இருக்கிறது ஒருவருக்கு.
ஆனால் அதனை மறப்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும், அது நீங்கள் யாருக்காக உங்களை உற்சாகமாக வைத்திருக்கிறீர்களோ, யாருக்காக உடல்வலிக்க உழைக்கிறீர்களோ, யாருக்காக கவலைப்படுகிறீர்களோ, அவர்களை மிகச் சீக்கிரமே முற்றிலுமாக இழக்க நேரிடும் என்பதே. உங்களின் இச்செயலால் உங்கள் குடும்பத்தினர் குடிக்க நேர்ந்தால் ????????
.

இழப்பை எனக்கு முன்பே உணர்த்த நினைத்திருக்கிறார் கடவுள். கடைசியில் அது நடந்தே முடிந்துவிட்டது. அவரின் விதி முடிந்தது, ஆனால் அவரை இழந்து தவிப்போரின் கதி - ?.

நாம் மிகவும் நேசிக்கும் நமது உற்றத்தையும், சுற்றத்தையும் பாதிக்கும் “குடி”யை குடிக்கத்தான் வேண்டுமா, பொருளாதாரம் குறைந்தால் கூட குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் பொருளுக்கே ஆதாரமாக, ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவன் இழந்தால், குடும்பம் என்ற அமைப்பே குலைய நேரிடும்.
எய்ட்ஸை விடக் கொடுமையான இந்த குடிப்பழக்கத்தால் நம்மில் பலர் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பாதிக்கப்பட்டிருப்போம்.
மருத்துவத்தால் சரி செய்ய முடியா நோய்கள் வந்து இழப்பு நேர்வது ஒரு பக்கம் ஏற்படுவது ஒருபக்கம் இருந்தாலும், இறைவன் கொடுத்த இந்த உயிர் சுமக்கும் உடலை, ஏன் தீண்டா திரவத்தை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.



நன்றி: http://amirdhavarshini.blogspot.in

மதுவால் ஏற்படும் சில பாதிப்புகள்

கிளர்ச்சி நிலை (excitement) : 

முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படுவதாக உணர்கிறார்கள் .

ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது. 

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும். 

இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது

1. தசை கட்டுப்பாடு இழக்கும்.

2. தொடு உணர்வுகள் குறையும்.

3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
 
 

1. வாய் வார்த்தைகள் குளறுதல்,

2. நடையில் தள்ளாட்டம்,

3. அதிக மயக்கம்,

4. ஞாபக மறதி

5. அதிக குழப்பம்

ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.

கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது..

 

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்(AA)

குடி நோயாளிகள் வாழ்வில் புது வசந்தம் வீசுவதற்கு காரணம், "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' (AA)  இயக்கம்.


அமெரிக்காவை சேர்ந்தவர் பில். இவர், ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றியவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், பணி யில் கவனம் செலுத்த முடியவில்லை; குடும் பத்தையும் கவனிக்க முடியவில்லை. குடிப்பழக் கத்தை கைவிட பெரும் முயற்சி எடுத்தார்; முடியவில்லை. வில்லியம் சில்க் ஒர்த் என்ற மனநல மருத்துவரிடம் சென்றார். குடிப்பழக்கத்தை நிறுத்து வதற்கு உதவி கோரினார். ஆறு ஆண்டுகள் போராடி யும், குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. ஆனால், எதையும் கருதாமல் டிச., 11,1934ல் திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தினார்.

இவரைப் போலவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் டாக்டர் பாப். அறுவை சிகிச்சை நிபுணர். குடிப்பழக்கம் இருந்தாலும், மருத்துவத் தொழிலில் பெரும் கில்லாடி. குடிக்காமல், அவரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது; கைகள் நடுங்கும்.

டாக்டர் பாப்பை அறிந்த பில், அவரை சந்திக்க நேரம் கோரினார். 15 நிமிடம் நேரம் ஒதுக்கித் தந் தார் டாக்டர் பாப். இருவரும் மனம் விட்டு பேசினர். 15 நிமிடம் நேரம் ஒதுக்கிய டாக்டர் பாப், ஆறே கால் மணி நேரம், குடிப்பழக்கம், அதனால் ஏற்படும் தீமை, பழக்கத்தை கைவிடும் முயற்சிகள் குறித்து பில்லுடன் உரையாடினார். குடிப்பழக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதில் இருந்து மீண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், இறுதித் தீர்வு கிடைக்கும் என்று இருவரும் நம்பினர். இந்த சந்திப்பு நிகழ்ந்தது மே 12,1935ல்.

சில நாட்களில் டாக்டர் பாப்பும் குடிப் பழக் கத்தை நிறுத்தினார். குடிப்பழக்கம் ஒரு நோய் என்பதை டாக்டர் பாப் உணர்ந்தார். கோபம், சுயபச் சாதாபம் போன்றவையே குடிப் பழக்கத்துக்கு முக் கிய காரணங்களாக உணர்ந்தார். தன் மருத்துவமனையில் குடிநோயாளிகளுக்கு, குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காகவே தனி வார்டு துவக்கினார்; ஆனால், அதில் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.

பில் மற்றும் டாக்டர் பாப் இது குறித்து ஆலோசித்தனர். இருவரும் சேர்ந்து, ஜூன் 10,1935ல் ஒரு குழுவை ஏற்படுத்தினர். "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' என்பது அந்த குழுவின் பெயர்.



 இந்த அமைப்பை துவக்கிய போது சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினர் பாப் மற்றும் பில். அவை:

* அரசின், மது தொடர்பான கொள்கை முடிவுகளில் தொடர்பு இல்லை.

* மதம், ஜாதி, பிரிவுகள், அமைப்புகள், அரசியல் இயங்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

* கட்டாய உறுப்பினர் சேர்க்கை கிடையாது.

* உறுப்பினர்கள் மட்டுமே நன்கொடை அளிக்கலாம்.
* அதிகபட்ச நன்கொடைக்கு வரம்பு நிர்ணயம். தற்போது, அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே, அதுவும் உறுப்பினர்களிடம் மட்டுமே நன்கொடை பெற்றுக் கொள்ளப்படுகிறது.

* எதிர்காலத்தில் சச்சரவுகளை தவிர்ப்பதற்கு, இக்குழுவுக்கென சொத்துக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.



அமெரிக்காவில் துவக்கப்பட்ட இந்த, "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பு, உலகம் முழுவதும் பரவியது. 212 நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 840 குழுக்கள் உள்ளன; இவற்றில் 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தினமும், குறிப்பிட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இக்கூட்டத்தில், மதுவால், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், அதில் இருந்து எப்படி மீண்டனர், அதற்குப் பின் ஏற்பட்ட புது வாழ்க்கையின் வசந்தம் குறித்தும், உறுப்பினர்கள் விவரிக்கின்றனர்.

பெங்களூரு மற்றும் மும்பையில், குடிப் பழக்கத்துக்கு ஆளான பெண்களை மீட்பதற்காக, பிரத்யேக கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.

"ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பில் உறுப்பினர்களாக இருப்போர், குடியின் கொடுமை குறித்து முழுமையாக அறிந்து, அதில் இருந்து மீண்டு, நல்வாழ்க்கை நடத்துவோர்கள் தான். இவர்கள், குடிப்பழக்கத்தில் இருந்து மற்றவர்களை மீட்பதை தங்களின் முக்கிய குறிக் கோளாக கொண்டுள்ளனர்.

குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு, மீண்டும் குடிக்கும் ஆவல் எழும் போது, இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அப்போது, அவர்கள் தொலைபேசியிலேயே கவுன்சிலிங் அளித்து, குடிக்கும் எண்ணத்தை மாற்றி விடுகின்றனர். தேவைப்பட்டால், வீட்டிற்கு அல்லது குடிப்பழக்கத்தை நிறுத்தியவர் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று கவுன்சலிங் அளிக்கின்றனர். இதை ஒரு சேவையாக மட்டுமின்றி, கடமையாக அவர்கள் கருதுகின்றனர்

நன்றி : http://deaddiction-ayurveda.blogspot.in

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் சுட்டிகளை சொடுக்கவும் .

AA தமிழ்நாடு

Sunday 30 September 2012

மது பற்றிய உண்மைகள் - இத படிங்க மொதல்ல



மதுவினால் பல பிரச்சனைகள் ஏற்பட்டபோதும் ஏன் நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண் டே இருக்கிறார்,

மன உறுதி இல்லாதவரா? வேண்டுமென்றே செய்யக்கூடியவராத?
அல்லது சில மனைவிமார்கள் நினைப்பது போல் வெறும் திமிரா?
இதில் எதுவுமே உண்மையான காரணம் இல்லை.

கட்டுப்பாடு இல்லாமல் குடிப்பது ஒரு நோய்! குடிநோய்க்கும் சிகிச்சை உண்டு!

மதுவைப்பற்றி சில தவறான எண்ணங்கள்

1. மது வகைகளில் உடல் நலத்திற்குத் தேவையான வைட்டமின்களோ புரதசத்துக்களோ, தாது உப்புக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களோ எதுவும் கிடையாது. மது வெறும் எரி சக்தி (Empty calories) மட்டுமே.
2. பீர் குடிப்பவரும நோயாளியே. எந்த மது வகையானாலும் போதையூட்டும் ரசாயணப் பொருள் ஆல்கஹால் என்பதே. நாட்டுச் சாராயத்திலிருந்து உயர்தர மது வகையில் இருப்பது இதுவே. ஆனால் உள்ள அளவு மட்டும் மாறலாம். இதுவே சிறுமூளையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
3. மது அருந்துவதால் உடல் சூடாகிறது என்பது முதல் கிளாஸ் வரையே, மதுவின் அளவு அதிகமாக, அதிகமாக இரத்தக் குழாயை விரிவடைய செய்து குளிரைத் தாங்கும் சக்தியைக் குறைக்கிறது.
4. மது உடல் உறவு சக்தியை அதிகரிக்கிறதுப என்பது பொய்யே.இது ஆசையை யும் வெறியையும் தூண்டி செயல்திறனை இழக்கச் செய்கிறது. தொடர்ந்து குடித்துக்கொண்டிருப்பவர் ஆண்மையை இழக்கிறார்கள்   இது  அறிவியல் உண்மை.

குடிநோய் என்பது என்ன?


கட்டுப்படுத்த முடியாது குடிப்பது ஒரு நோய் என உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்க மருத்துவச் சங்கமும் 1956 – ம் ஆண்டு கூறின.
சாதாரணமாக மது அருந்த ஆரம்பித்த பத்து பேரில் இரண்டு பேர் மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர். இவர்களே குடி நோயாளிகள்.

குடி நோயாளியின் அறிகுறிகள்


போதை ஏற இரண்டு கிளாஸ் குடித்தவருக்கு அதே அளவு போதை ஏற 4 கிளாஸ் தேவைபடும். குடியின் அளவு அதிகரித்தல் இது அவரது உடல் உறுப்புகள் சீர்கெட்டுப்போகும்.
குடி போதையால் நேற்று செய்து, நடந்த நிகழ்ச்சிகள் பற்றி அடுத்தநாள் சொல்ல முடியாத ஞாபக மறதி (Black out) என்னும் நிலை.
எப்போது மாலை நேரம் வரும்? எப்போது வேலை முடியும்? எப்போது விடியும்? எப்போது, எங்கு குடிப்பது என குடி பற்றிய சிந்தனையிலேயே இருப்பது.


தன்னைத்தானே வெறுப்பது, மற்றவரின் மேல் குறை கூறுவது கோபப்படுவது, எரிச்சல் அடைவது குறிப்பாக மனைவி மீது சந்தேகப்படுவது
கோயிலுக்கு வேண்டிக்கொடு குடியை நிறுதவதாக சத்தியம் செய்தல், குழந்தைகளை வேண்டுதல்.
குடிப்பதற்காகக் காரணமில்லாமல் பொய் சொல்வது திருடுவது ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல். உடல் உறுப்புகள் பாதிப்பினால் கை கால்நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, பலகீனம் ஏற்புதல், (உ-ம்0 மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண், ஈரல் வீக்கம் ஏற்படுதல்,
தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள், குரல்கள் உருவங்கள் தெரிதல்.
தன் இயலாமை, அவநம்பிக்கையால்தன் மனைவியின் நடத்தையை சந்தேகித்தல், தற்கொலை முயற்சி செய்தல்.

இப்படியே குடி தொடர்ந்தால்!

உடல் நலம் கெட்ட அகால மரணத்தை தழுவுவர்.
குடும்ப உறவுகள் பாதித்து மனைவி பிரிந்து போவார். தனிமைப் படுத்தப்படுவர்.
குழந்தைகளை மன நிலை பாதிகப்பட்டு அவர்களின் படிப்பு எதிர்காலம் பாழாகும். அவர்களும் குடிக்கு அடிமையாக்க் கூடும்.
தொழிலில் ஈடுபாடு இன்மையால் நஷ்டம்.
தொடர்ந்து குடித்து மன நோயாளியாவர். தற்கொலை முயற்சி செய்வர்.
இந்நிலையில் மதுவை முழுமையாய் விட்டுத் தெளிவான புது வாழ்வைத் துவங்குதே அவர்கள் வாழ மீள ஒரே வழி. குடி பழக்கத்தை முற்றிலும் விடுவது..
மருத்துவ மனோத்த்துவ சிகிச்சை மூலம் குணம் பெறலாம்.

1. உடலில் உள்ள மதுவின் பாதிப்பை நீக்கி உடல் நலம் தரும் ம ருத்துவ  சிகிச்சை தரப்படுகிறது. (Detoxification) (மருத்துவமனையில் தங்கி டாக்டர் உதவி பெறுவது முதல் அவசியத் தேவை)
2. குடி நோயாளியின் மனநிலை குடும்பம், சமூக உறவுகள் இவற்றின் பாதிப்புகளை மன இயல் ரீதியாக ஆராய்ந்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
3. மனச்சுமைகளை தடைகளை கலக்கத்தை நீக்க கலந்துரையாடல்கள் அளிக்கப்படுகிறது.
4. குழு சிகிச்சை முறை, குடும்பத்தினருக்கு ஆலோசனை (Group theraphy, family therapy)  உடற்பயிற்சி,  தியானம் அளிக்கப்படுகிறது.
5. ஓராண்டு கால மருத்துவ மனோதத்துவ ஆலோசனை உதவி இவற்றால் பூரண கு ணம் பெறலாம். ஒரு வருட காலம் எங்களுடன் தொடர்பு கொள்வது அவசியம்.
குடிநோய்க்கு  அடிமையாகிவிட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, புனர் வாழ்வு கொடுப்பதை நோக்கமாகக்கொண்டு இலாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்,மகளிருக்கும் விரிவான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Thursday 27 September 2012

Check really you are Addicted to Alcohol?


 

Have I Got Problems With Alcohol?


This really is a very simple and straight forward question you should be asking yourself, but would someone really know if they’ve got a severe drinking issue?
StopWell the easy answer is NO, and that’s why most people worldwide with a severe alcohol problem don’t even realize it. They seem to have their blinkers on and are only interested in seeing what’s in front of them rather than stepping outside of their own little box, and people like this hardly ever admit that alcohol plays a part in their life.
How would know for certain that you have a drinking issue? You have to begin taking steps and asking yourself a few pretty severe questions about your own behavior.
You might think diagnosing any illness like drinking is simple, and it is if you follow the appropriate process, just like you would for diagnosing anything else.
So, here are eleven questions which you need to be asking yourself regarding your own personal relationship with alcohol.
If by any chance they do apply to you, then you will need to take further action, and begin treating your alcohol issue today!
1 - When I’m consuming alcohol does it cause problems?

2 - I’m constantly seeking additional alcohol when I have exceeded my limit?

3 - Have you made an attempt at quitting alcohol before?

4 - Do I try and conceal alcohol in or around the home?

5 - After I get intoxicated do I constantly forget what I’ve done?

6 - When I am drinking does my personality change and I become another person?

7 - When I am inebriated do I become frightening or get angry with other people?

8 - When you’re in a sad mood, or you’re alone are you always looking for the bottle?

9 - Do you tend to fall out with the people around you, like friends and family when you have been drinking?

10 - Is your health affected when drinking too much alcohol?

11 - Ever thought how much your life would change for the better if you stopped drinking?


Okay now you’ve read and answered all the questions freely and truthfully, how many did you say “Yes” to? If you’ve answered “Yes” to a minimum of three questions, then you do need to start looking for help.

Courtesy : http://www.stopdrinkingadvice.org

Say No to Alcohol

Alcoholism – A Disease That Affects The Entire Family

Alcoholism is a disease that affects every member of the family, to the extent that the kids who make it into the Alateen rooms report they generally have more problems dealing with the non-drinking parent than they do the alcoholic.

What? I don’t have a problem! He… him… he’s the alcoholic! He’s the one who is in trouble all the time! He’s the one who causes all the problems…
True, but he’s also predictable. Kids can read the alcoholic like a book.

They know exactly when it’s the right time to ask for extra money, or to go somewhere with their friends, and also know when it’s time to make themselves scarce and get out of the way. They know the routine as far as the alcoholic is concerned. But they never know where the bedraggled non-drinking parent is coming from next.

One minute she (or he as the case may be) is screaming at the alcoholic — threatening him with everything from from divorce to death — and the next minute she may be compassionately rescuing him from the consequences of his latest episode — dutifully cleaning up his messes, making excuses for him and accepting an increasing degree of unacceptable behavior.

The reality of alcoholism changes the life of the entire family, the attitudes and thinking of everyone changes perhaps more dramatically than it does for the drinking spouse and is often hard to recognize. Why? Because it creeps up slowly.
 

Saturday 15 September 2012

மதுவின் பாதிப்புகள்

மதுவினால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள்


நாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போக, மீதமுள்ள பல்வேறு சத்துக்களம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். அதுபோல மது அருந்தும் போது அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலைச் சென்றடையும். பல்வேறு உணவுகள், மருந்துகள் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுவது போல, மதுவின் வளர்ச்சிதை மாற்றங்களிலும் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது.
 மது முதலில் கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜீனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜீனஸ் என்ற நொதியால், அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப் பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கும். மதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும்.

மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.

மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்
கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல், கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரிதாதல், ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில் கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப் படியும்.

அறிகுறிகள்
துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாது, ஆரம்ப நிலையில் கல்லீரல் வீக்கம் இருக்கும்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் மஞ்சள் காமாலை, மூளை நலிவு, மகோதரம், வைட்டமின் சத்துக்குறைபாடு, பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.

சிகிச்சை
கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் இறுக்கி நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கல்லீரல் தவிர, இதயம், மூளை, நரம்பு மண்டலம், இனவிருத்தி உறுப்புகள், கணையம், இரைப்பை குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.

உங்களால் மது பழக்கத்தை  விட முடியும்  ..
மது அடிமை மறுவாழ்வு மையம்.
சென்னை மாநகராட்சி,
மிர்சா ஹைதர் அலி கான் தெரு ,
ராயப்பேட்டை ,
சென்னை
9941791966