இழப்பைப் பற்றி சொல்வதானால்: அவர் குடித்த குடி, இறுதியில் அவர் “குடி”யையே கெடுத்தது.
மஞ்சள் காமாலையினால் ஏற்பட்ட லிவர் ப்ராப்ளத்தை சரி செய்ய ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கும் சில நாட்களிலேயே அவர் உட்கொண்ட ஆல்கஹால் அவரையே அழித்துவிட்டது. எதிர்பாராத திடீர் இழப்பு.
குடிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தும், எடுத்துச்சொல்லியும், அதனை அவர் ஏற்றுக்கொண்ட போதும் அவரைப் பாடாய்படுத்தியது அவருக்கு உண்டாக்கப்பட்ட குடிப்பழக்கம்.
சிப், சிப்பாக ஆரம்பித்து, பெக், பெக்காக தொடர்ந்து, பாட்டில் பாட்டிலாக விழுங்கியது, இறுதியில் அவரையே விழுங்கி விட்டது.
டி.வி.யில் மது அருந்தும் காட்சி வரும்போது, இப்போதெல்லாம் மது உடல் நலத்திற்கு கேடு என்று போடுகிறார்கள். இதைப் பார்க்கும் போது மிக இயல்பாக கடந்து விடுகிறேன். ஏன் என்றால் மதுப் புட்டியின் மீதே ”வீட்டிற்கும், நாட்டிற்கும், உடல் நலத்திற்கு கேடு” என்று அச்சடித்திருக்கும்போதே, ஆயிரம் ஆயிரம் பேர்கள் அதனை அருந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆயிரம் பேரில் படிக்காதவர்கள் 500 பேர் இருந்தால், படித்தவர்கள் அதற்கு சமமாய் இருப்பார்கள் அல்லவா. அவர்களைக் கூட இந்த வாசகம் பாதித்திருக்காதா.
ஒருவர் குடிப்பது அவருக்கு இன்பமாக இருக்கிறது, ஆனால் அவரின் சுற்றத்திற்கு குறிப்பாய் மனைவி, மக்களுக்கு தீராச் சோகம். இதனை அறிந்த ஆண் மக்கள் குடிப்பதுதான் வேதனை தரும் விஷயம்.
நாளை முதல் குடிக்க மாட்டேன், இது சத்தியமடி தங்கம் - இது சத்தியமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இழப்பை எதிர்நோக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், இழந்தவர்களாய் அவர்கள் இருக்கும்போதுதான் அதனருமைத் தெரியும். உங்களிடம் குடிப்பழக்கம் இருக்குமாயின் குடிப்பதற்கு முன், உங்கள் மனைவியையோ, குழந்தையோ ஒரு தரம் கண் முன் நிறுத்துங்கள்.
நண்பர்களுக்காகவென்றும், சந்தோசத்தை கொண்டாடவும், கவலையை மறக்கவும், உடல் வலி மறக்க என குடிக்கத்தான் எவ்வளவு காரணங்கள் இருக்கிறது ஒருவருக்கு.
ஆனால் அதனை மறப்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும், அது நீங்கள் யாருக்காக உங்களை உற்சாகமாக வைத்திருக்கிறீர்களோ, யாருக்காக உடல்வலிக்க உழைக்கிறீர்களோ, யாருக்காக கவலைப்படுகிறீர்களோ, அவர்களை மிகச் சீக்கிரமே முற்றிலுமாக இழக்க நேரிடும் என்பதே. உங்களின் இச்செயலால் உங்கள் குடும்பத்தினர் குடிக்க நேர்ந்தால் ????????.
இழப்பை எனக்கு முன்பே உணர்த்த நினைத்திருக்கிறார் கடவுள். கடைசியில் அது நடந்தே முடிந்துவிட்டது. அவரின் விதி முடிந்தது, ஆனால் அவரை இழந்து தவிப்போரின் கதி - ?.
நாம் மிகவும் நேசிக்கும் நமது உற்றத்தையும், சுற்றத்தையும் பாதிக்கும் “குடி”யை குடிக்கத்தான் வேண்டுமா, பொருளாதாரம் குறைந்தால் கூட குடும்பம் நடத்திவிடலாம், ஆனால் பொருளுக்கே ஆதாரமாக, ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவன் இழந்தால், குடும்பம் என்ற அமைப்பே குலைய நேரிடும்.
எய்ட்ஸை விடக் கொடுமையான இந்த குடிப்பழக்கத்தால் நம்மில் பலர் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ பாதிக்கப்பட்டிருப்போம்.
மருத்துவத்தால் சரி செய்ய முடியா நோய்கள் வந்து இழப்பு நேர்வது ஒரு பக்கம் ஏற்படுவது ஒருபக்கம் இருந்தாலும், இறைவன் கொடுத்த இந்த உயிர் சுமக்கும் உடலை, ஏன் தீண்டா திரவத்தை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.
நன்றி: http://amirdhavarshini.blogspot.in









Well the easy answer is NO,
and that’s why most people worldwide with a severe alcohol problem
don’t even realize it. They seem to have their blinkers on and are only
interested in seeing what’s in front of them rather than stepping
outside of their own little box, and people like this hardly ever admit
that alcohol plays a part in their life.

